close
Choose your channels

ஆலியா பட்- ரன்பீர் கபூரின் திருமணம் ஒத்திவைப்பா? என்ன காரணம்?

Wednesday, April 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் காதலித்து வருவதும், இந்த காதல் ஜோடிகளின் திருமணம் ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெற இருந்ததும் ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். ஆனால் நாளை நடைபெற இவர்களது திருமணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட்டின் மகள் ஆலியாவும் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ரிஷி கபூர் மற்றும் நீத்து சந்தின் மகனான ரன்பீர் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட “பிரம்மாஸ்திரா“ திரைப்படத்தில் இணைந்து நடிக்கத் துவங்கினர். அப்போது இவர்களுக்குள் காதல் மலரவே பின்னர் நடிகை சோனம் கபூரின் திருமணத்தில் ஒன்றாகக் கலந்து கொண்டு தங்களது காதலை உறுதிப்படுத்தி இருந்தனர். அதைத் தொடர்ந்து ரசிகர்களிடையே இவர்களது திருமணம் குறித்து அதிக எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் ஏப்ரல் 14,15 ஆம் தேதிகளில் இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது நடிகை ஆலியாவின் ஒன்றுவிட்ட சகோதரரான ராகுல் பட் கூறுகையில் ஆலியா- ரன்பீரின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீடியாக்களுக்கு திருமணம் குறித்த தகவல்கள் கசிந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அடுத்த வாரம் இந்தத் திருமணம் நடைபெறும் என்று கூறிய அவர் தேதி இன்னும் முடிவு செய்யப்பட வில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆலியா-ரன்பீர் திருமணத் தேதி குறித்து இயக்குநர் மகேஷ் பட் மற்றும் ரன்பீரின் அம்மா நீத்து சந்துவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் பொதுவெளியில் திருமணத் தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதனால் ரன்பீர்- ஆலியாவின் விரைவில் நடைபெறும் என்றும் இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் கருத்து வெளியாகி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.