close
Choose your channels

9 தமிழ் திரை பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட “ரங்கோலி”  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !!! 

Sunday, November 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அருண் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அதர்வா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், நடிகர் சதீஷ் நடிகை வாணி போஜன், நவீன் சந்த்ரா கார்த்திக் ரத்னம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

ஸ்கூல் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையை, அவர்களது குடும்பங்களை சுற்றிய கதைகளை நம் தமிழ் சினிமா சொல்வதே இல்லை. இப்படம் அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் ஒரு அருமையான குடும்பப்படமாக இப்போதைய பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படம்.

பள்ளி மாணவர்கள் ஒன்றாக கூடி நிற்கும் இபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் பலரது பள்ளி ஞாபகங்களை கிளறுவதோடு, அனைவரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகாமகிறார். பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ் முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கடப்பா ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.

கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி KS இசையமைத்துள்ளார். I.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். G.சத்யநாராயணன் எடிட்டிங் செய்துள்ளார்.

தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.