கோடை விடுமுறையில் வெளியாகும் சமந்தாவின் அடுத்த படம்!

  • IndiaGlitz, [Friday,April 26 2019]

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு, வெற்றிப்படமாகவும் அமைந்தது. அதேபோல் சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் நடித்த 'மஜிலி' திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த நிலையில் ராம்சரண் தேஜாவுடன் சமந்தா நடித்த 'ரங்கஸ்தலம்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் சென்னை உள்பட முக்கிய நகரங்களிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 'ரங்கஸ்தலம்' படம் தற்போது தமிழில் டப் ஆகி வரும் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தமிழில் ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா வெளியிடவுள்ளார். ரங்கஸ்தலம் படம் தயாரிப்பில் இருந்தபோதே அதன் ஒவ்வொரு நிலைகளையும் கவனித்து வந்ததாகவும், அந்த படத்தின் முக்கியமான சில சிறப்பு அம்சங்களை தன்னால் உணர முடிந்ததாக கூறிய ஞானவேல்ராஜா, வரும் கோடை விடுமுறை விருந்தாக, ‘ரங்கஸ்தலம்’ படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.
 

More News

எனக்கு இதுவரை யாரும் சொன்னதே இல்லை! சேரன் காட்டம்

நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் நடிகர், நடிகைகளின் பிறந்த நாளின்போது சங்கத்தின் சார்ப்பில் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவிப்பதை ஒரு வழக்கமாக வைத்துள்ளனர்.

பத்து ரூபாய்க்கு 8 மணி நேரம் போதை! விளைவு தெரியாமல் பயன்படுத்தும் சிறுவர்கள்! கண்டுபிடிப்பது எப்படி?

இந்த போதை பழக்கம் வடமாநில இளைஞர்களிடம் இருந்து, தமிழகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது...

திரைப்படமாகிறது தங்கமங்கை வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு

கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் அதிகளவில் திரைப்படமாக்கப்படுகிறது.

நடிகை எமிஜாக்சனின் திருமண தேதி அறிவிப்பு!

விஜய் இயக்கிய 'மதராசப்பட்டணம்' படத்தில் அறிமுகமாகி அதன் பின் ரஜினியின் '2.0', விஜய்யின் 'தெறி', தனுஷின் 'தங்கமகன், விக்ரமின் 'ஐ' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் எமிஜாக்சன். 

பிரதமரை பேட்டியெடுத்த அக்சயகுமாரை கிண்டல் செய்த தமிழ் நடிகர்!

மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்டது.