தளபதி விஜய்யின் ரசிகை என அறிமுகம் செய்து கொண்ட பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Sunday,February 23 2020]

தளபதி விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பது தெரிந்ததே. மேலும் தளபதி விஜய்யின் ரசிகர்களாக கோலிவுட் திரையுலகில் உள்ள பல பிரபலங்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யின் திரைப்படங்கள் வெளியாகும் தினத்தன்று முதல் நாள் முதல் காட்சியை கோலிவுட் பிரபலங்கள் திரண்டு பார்த்து அவருடைய படங்களைப் பாராட்டி வருகின்றனர் என்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

இந்த நிலையில் சென்னை அருகே உள்ள கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட பிரபல நடிகை ராஷிகண்ணா தன்னை தளபதி விஜய்யின் ரசிகை என்று கூறிக்கொள்வதில் பெருமைபடுவதாகக் கூறியுள்ளார். மேலும் தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்திற்காக பயங்கரமாக வெயிட்டிங் என்றும், அவருடைய தீவிர ரசிகை நான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தளபதியின் ரசிகை நான் என்று ராஷிகண்ணா கூறிய உடன் எழுந்த கரகோஷம் விண்ணை பிளந்தது. இதனையடுத்து தளபதியின் அடுத்த படத்தில் ராஷிகண்ணா தான் நாயகியாக நடிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தளபதி 65 படத்தில் ராஷிகன்னா நடிக்க ஒப்பந்தம் ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'சில்லுக்கருப்பட்டி' இயக்குனருக்கு சிறப்பு பரிசு கொடுத்த ஜோதிகா!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான 'சில்லுக்கருப்பட்டி' என்ற திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது.

என்னுடைய ஒரே ரொமான்ஸை தடுத்துவிட்டார்கள்: வீடியோவில் அழுத நித்யானந்தா

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி தலைமறைவாகி போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, அவ்வப்போது வீடியோக்களை இணையதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும்

தமிழ் திரைப்பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிர்வாகம்!

தமிழ் திரைப்பட நடிகை ஒருவரிடம் ஏர் இந்தியா நிர்வாகம் மன்னிப்பு கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அடப்பாவி, உன்னை போயி போராளின்னு நினைச்சேனே! கஸ்தூரி டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற சென்றிருந்தபோது

அச்சமூட்டும் கொல்லிமலையும் அதன் ஆன்மீக வரலாறும்

கொல்லிமலை என்று சொன்னாலே நம்மையும் அறியாமல் ஒரு அச்சம் உள்ளூறத் தொற்றி கொள்வது இயல்புதான்.