close
Choose your channels

மாலத்தீவு சென்ற ராஷ்மிகா மந்தனா.. அதே விமானத்தில் சென்ற பிரபல நடிகர்.. உண்மையாகிறதா கிசுகிசு?

Saturday, October 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா விடுமுறைக்காக மாலத்தீவு சென்ற நிலையில் அதே விமானத்தில் பிரபல நடிகர் ஒருவரும் சென்றதை அடுத்து இருவரும் காதலிக்கிறார்கள் என்ற கிசுகிசு உண்மையாகிறதா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

தமிழில் விஜய்யுடன் ’வாரிசு’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’ஜப்பான்’ என்ற படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் இவர்தான் நாயகி என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா விடுமுறைக்காக மாலத்திவு சென்றுள்ளார். அதே விமானத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் மாலத்தீவு சென்றுள்ளதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ’கீதா கோவிந்தம்’ ’டியர் காம்ரேட்’ ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் கிசுகிசு பரவி வருகிறது.

இந்த நிலையில் இருவரும் தனித்தனியே விமான நிலையத்திற்கு வந்தாலும் ஒரே விமானத்தில் மாலத்தீவு சென்றுள்ளதால் இருவரும் திட்டமிட்டே மாலத்தீவு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து காதல் கிசுகிசு உண்மையாகிறதா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.