சேமிப்பு கணக்கில் இருந்தும் பணம் எடுக்க கட்டுப்பாடு தளர்வு. ஆர்பிஐ உத்தரவு

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு புதிய ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் வங்கியின் கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பிப்ரவரி 1 முதல் நடப்பு கணக்கு, சிசி கணக்கு, ஓவர் டிராப்ட் கணக்கு ஆகியவற்றில் இருந்து பணம் எடுக்க உச்சவரம்பு இல்லை என்றும் அதேபோல் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கவும் இனி கட்டுப்பாடு இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்தது.

இந்நிலையில் தற்போது சேமிப்பு கணக்கில் இருந்தும் பணம் எடுக்க தட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி தளர்த்தி உள்ளது. பிப்ரவரி 20ம் தேதி முதல் சேமிப்பு கணக்கில் இருந்து வாரத்திற்கு ரூ 50,000 எடுக்கலாம் என்றும் மார்ச் 13 முதல் இந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

More News

அதிமுக எம்.எல்.ஏக்கள் கடத்தலா? எம்.எல்.ஏக்களுடன் செல்லும் 2 பேருந்து எங்கே ?

இன்று காலை அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் நடந்தது...

என் சொத்துக்களை மிரட்டி வாங்கியவர் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதா? கங்கை அமரன் ஆவேசம்

பிரபல இசையமைப்பாளரும், பாஜக் கட்சியில் பணியாற்றி வருபவருமான கங்கை அமரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அசாதாரணமான சூழ்நிலை குறித்து தனது கருத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தனிக்கட்சி தொடங்க திட்டமா? ஓபிஎஸ் அதிரடி பதில்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்ப பெற்றுவிட்டு மீண்டும் முதல்வர் பதவியை ஏற்பேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார்...

திமுக ஆதரவை கோர மாட்டேன். ஓபிஎஸ்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்து கொண்டு வருகிறார்...

2012க்கு பின் நான் சசிகலாவை பார்க்கவே இல்லை. ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் நேற்றிரவு சென்னை மெரீனாவில், இன்று காலை அவரது இல்லத்தில் பேட்டி அளித்த நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேட்டியளித்துள்ளார்