ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் அடுத்த ரிலீஸ் இந்த பிரபலத்தின் படமா?

  • IndiaGlitz, [Saturday,July 23 2022]

கடந்த சில மாதங்களாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’ உலகநாயகன் கமல்ஹாசனின் ’விக்ரம்’ தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ உள்பட பல படங்களை ரிலீஸ் செய்தது. மேலும் தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட பல படங்களை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரபுதேவா நடித்த ’பொய்க்கால் குதிரை’ திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பை தான் இன்று இரவு 7 மணிக்கு வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை 7 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரபுதேவா, வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மூன்று படங்களும் தோல்வி, இனிமேல் சினிமாவை இயக்க மாட்டேன்: கமல் பட இயக்குனர் அறிவிப்பு

கமல்ஹாசன் படம் உள்பட மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் தனது மூன்று படங்களும் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பதால் இனிமேல் சினிமாவை இயக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற சூர்யா ரசிகர்களுக்கு கலைப்புலி எஸ் தாணுவின் அசத்தல் பரிசு!

நடிகர் சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' என்ற திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளை பெற்றது என்பதும் குறிப்பாக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம் 

பணம், பெயர், பெரிய அரசியல்வாதியை பார்த்தவன் நான், ஆனாலும் சந்தோஷம் இல்லை: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, 'பணம், புகழ் மற்றும் பெரிய பெரிய அரசியல்வாதிகளை நான் பார்த்தவன்

என் ஜோதிகாவிற்கு தேசிய விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்: சூர்யாவின் நெகிழ்ச்சி அறிக்கை

 நேற்று 68வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கு கிடைத்தது என்பது மட்டுமின்றி அவர் நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படத்திற்கு மொத்தம் ஐந்து விருதுகள்

நடன மாஸ்டர் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை: திரையுலகினர் வாழ்த்து!

பிரபல நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர்  மற்று லலிதா ஷோபி மாஸ்டர் தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை அடுத்து திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.