close
Choose your channels

திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்:  ரியோ மனைவி வெளியிட்ட புகைப்படம் வைரல்!

Saturday, April 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் எடுத்த புகைப்படத்தை நடிகர் ரியோவின் மனைவி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் திரைப்பட நடிகர் ரியோராஜ் பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டார் என்பதும் அவர் அந்த சீசனில் மூன்றாவது இடத்தைப் பெற்றார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சுருதி என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ரியோவுக்கு ரிதி என்ற பெண் குழந்தை உள்ளது. ரியோ மனைவி ஸ்ருதி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவை வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் ரியோவை திருமணம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் எடுத்த புகைப்படத்தை ஸ்ருதி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ரியோவை திருமணம் செய்த நாளில் அணிந்த வெள்ளை கவுன் இன்னும் என் மனதில் இனிமையான அனுபவமாக ஞாபகம் இருக்கிறது என்று கூறியுள்ள ஸ்ருதி, ‘ஏன் இந்த போஸ்ட் என்று யாரும் கேட்கவேண்டாம், சும்மாதான் கூகுள் மெமரியில் வந்ததால் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.