ஆர்ஜே பாலாஜியின் 'எல்.கே.ஜி' ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Wednesday,January 23 2019]

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய ஆர்ஜே பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் 'எல்.கே.ஜி'. அரசியல் நையாண்டி கதையம்சத்துடன் கூடிய இந்த படம் ரிலீசுக்கு தயாராகி ஒருசில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் என செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது

ஆர்ஜே பாலாஜி, ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். மேயாத மான் படத்தின் ஒளிப்பதிவாளர் விது ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது

More News

'ராட்சசன்' தெலுங்கு ரீமேக்கில் பிரபல தயாரிப்பாளரின் மகன்?

ராட்சசன் தெலுங்கு ரீமேக்கில் பெல்லாம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், விஷ்ணு கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

திருமணம் என்பது நடிகைகளுக்கு முற்றுப்புள்ளியா? ரித்விகா

பிக்பாஸ் இரண்டாவது சீசன் டைட்டில் வின்னரும், நடிகையுமான ரித்விகா அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள போவதாகவும், இந்த ஆண்டு ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு

சிம்புவின் 'வாங்க மச்சான் வாங்க' ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது.

ராகவா லாரன்ஸ் அடுத்த படத்தில் '2.0' கனெக்சன்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய முனி, முனி 2 காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் 'காஞ்சனா 3' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது.

யாரையும் ஏய்த்துப்பிழைக்க எண்ணாத நடிகர்: அஜித்துக்கு தந்தையாக நடித்த நடிகர் பாராட்டு

அஜித் நடித்த 'கிரீடம்' படத்தில் அவருக்கு தந்தை கேரக்டரில் நடித்த நடிகர் ராஜ்கிரண் அஜித்தின் அறிக்கை குறித்து தனது சமூக வலைத்தளத்தில் 'யாரையும் ஏய்த்துப்பிழைக்க எண்ணாமல்,