close
Choose your channels

ஆர்ஜே பாலாஜியின் 'எல்.கே.ஜி' ரிலீஸ் தேதி

Wednesday, January 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய ஆர்ஜே பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் 'எல்.கே.ஜி'. அரசியல் நையாண்டி கதையம்சத்துடன் கூடிய இந்த படம் ரிலீசுக்கு தயாராகி ஒருசில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் என செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது

ஆர்ஜே பாலாஜி, ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். மேயாத மான்" படத்தின் ஒளிப்பதிவாளர் விது ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.