படப்பிடிப்பில் விபத்து.. 3 நாட்களாக கண்ணை திறக்காமல் இருளில் தத்தளித்த 'ரன் பேபி ரன்'  நடிகை..!

  • IndiaGlitz, [Tuesday,May 16 2023]

ஆர்ஜே பாலாஜி நடித்த ’ரன் பேபி ரன்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்த நடிகை ஒருவருக்கு படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக கண்ணில் காயமடைந்து மூன்று நாட்கள் கண்ணை திறக்க முடியாமல் இருளில் தத்தளித்ததாக தெரிவித்துள்ளார்.

மிர்ச்சி சிவா நடித்த ’தில்லுமுல்லு’ மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான ’மீண்டும் ஒரு காதல் கதை’ உட்பட ஒரு சில தமிழ் மற்றும் மலையாள ஹிந்தி படங்களில் நடித்தவர் நடிகை இஷா தல்வார். சமீபத்தில் வெளியான ‘ரன் பேபி ரன்’ என்ற திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜியின் காதலியாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் படப்பிடிப்பு ஒன்றில் இஷா தல்வார் கலந்து கொண்டிருந்த போது ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பின் போது படக்குழுவினர் வைத்திருந்த வெடிபொருள் திடீரென வெடித்தது. இதில் இஷா தல்வார் இடது கண்ணில் காயம் ஏற்பட்டதாகவும் மூன்று நாட்களாக அவர் கண்ணை திறக்க முடியாமல் தத்தளித்ததாகவும் கூறியுள்ளார். பிறகு மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற பிறகு தற்போது நலமாக இருப்பதாகவும் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

இந்த நிலம் எதற்காக தோன்றியது?  விஜய் சேதுபதியின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' டிரைலர்..!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது தான் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மே 19 என சமீபத்தில்

தளபதி விஜய்யின் 'லியோ' படத்தில் மீண்டும் விஜய்சேதுபதி?  மாஸ் தகவல்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் சமீபத்தில் அவரே விளக்கமளித்தபோது, 'லியோ' திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை

தீபாவளி ரேஸில் இருந்து விலகுகிறதா கார்த்தியின் 'ஜப்பான்'?

கார்த்தியின் 'ஜப்பான்' உட்பட நான்கு பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீபாவளி ரேஸில் இருந்து 'ஜப்பான்' திரைப்படம் விலகி முன்கூட்டியே

வானில் மில்லியன் ஸ்டார்கள் இருந்தாலும் ஒரே சூப்பர் ஸ்டார் இவர் தான்: ரஜினியை சந்தித்த ஐபிஎல் வீரரின் பதிவு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு இரண்டு ஐபிஎல் பிரபல கிரிக்கெட் வீரர்கள் சென்று அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட  நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் பிரபல இயக்குனரின் அடுத்த படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனரின் அடுத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த வீடியோவும்