இன்ஜினியரிங் என்ன நம்ம குலத்தொழிலா? 'சிங்கப்பூர் சலூன்' டிரைலர்

  • IndiaGlitz, [Friday,January 19 2024]

ஆர்ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன்’ என்ற திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்த ஆர்ஜே பாலாஜி ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக புரமோஷன் பெற்றார். அதன் பிறகு ’வீட்ல விசேஷங்க’ ’ரன் பேபி ரன்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த ஆர்ஜே பாலாஜி தற்போது ’சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.ஜே பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, சத்யராஜ், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் லோகேஷ் கனகராஜ், ஜீவா ஆகியோர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த படத்தின் டிரைலரில் சிறுவயதில் தான் பார்த்த சாச்சா என்ற சலூன்காரரின் திறமையை பார்த்து அதிசயித்து தானும் வருங்காலத்தில் ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் என்று ஹீரோ முடிவெடுக்கிறார். அதற்கு குடும்பத்தில் இருந்தே வரும் எதிர்ப்பு, ஒரு வழியாக எதிர்ப்பை மீறி சலூன் கடை வைத்து சாதிப்பது, ஆனால் பிற சலூன் கடை ஓனர்களின் செய்யும் சதி ஆகியற்றில் இருந்து ஹீரோ எப்படி மீண்டு வருகிறார் என்பது குறித்த காட்சிகள் இந்த ட்ரெய்லரில் உள்ளன,

இந்த படம் ஆர்ஜே பாலாஜிக்கு மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோகுல் இயக்கத்தில், விவேக் மெரின் இசையில் உருவாகிய இந்த படத்திற்கு எம் சுகுமார் ஒளிப்பதிவும், செல்வா படத்தொகுப்பு பணியும் செய்து உள்ளனர்.

 

More News

நயன்தாரா அறிக்கைக்கு பிக்பாஸ் பிரபலம் போட்ட கமெண்ட்.. என்ன தெரியுமா?

'அன்னபூரணி' படத்தால் ஏற்பட்ட பிரச்சனை குறித்து வருத்தம் தெரிவித்து நடிகை நயன்தாரா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த அறிக்கைக்கு பின்னர்  'அன்னபூரணி'

'சலார்' உள்பட இந்த வாரம் எத்தனை படங்கள்? ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

 ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடி தளங்களிலும் ரிலீஸ் ஆகி வருகிறது

சிறகடிக்க ஆசை.. பொங்கல் சீரில் ஏற்பட்ட பிரச்சனை.. விஜயாவை வறுத்தெடுக்கும் பாட்டி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறைந்த நாட்களில் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்திற்கு வந்துள்ளது என்பது

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் தொடரும் குரூப்பிஸம்.. மாறாத பகை..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கும் போது பகை உணர்வாக இருந்தாலும் வெளியே வந்த பிறகு நட்புறவு பாராட்டி வருவதை தான் கடந்த ஆறு சீசன்களில்

'அன்னபூரணி' சர்ச்சை.. 'ஜெய் ஸ்ரீராம்' என தொடங்கி நயன் தாரா வெளியிட்ட அறிக்கை..!

 நடிகை நயன்தாரா நடித்த 'அன்னபூரணி' என்ற திரைப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில் அதில் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய வசனம் இருந்ததை அடுத்து