close
Choose your channels

இன்ஜினியரிங் என்ன நம்ம குலத்தொழிலா? 'சிங்கப்பூர் சலூன்' டிரைலர்

Friday, January 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன்’ என்ற திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்த ஆர்ஜே பாலாஜி ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக புரமோஷன் பெற்றார். அதன் பிறகு ’வீட்ல விசேஷங்க’ ’ரன் பேபி ரன்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த ஆர்ஜே பாலாஜி தற்போது ’சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.ஜே பாலாஜி, மீனாட்சி சவுத்ரி, சத்யராஜ், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் லோகேஷ் கனகராஜ், ஜீவா ஆகியோர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த படத்தின் டிரைலரில் சிறுவயதில் தான் பார்த்த சாச்சா என்ற சலூன்காரரின் திறமையை பார்த்து அதிசயித்து தானும் வருங்காலத்தில் ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் என்று ஹீரோ முடிவெடுக்கிறார். அதற்கு குடும்பத்தில் இருந்தே வரும் எதிர்ப்பு, ஒரு வழியாக எதிர்ப்பை மீறி சலூன் கடை வைத்து சாதிப்பது, ஆனால் பிற சலூன் கடை ஓனர்களின் செய்யும் சதி ஆகியற்றில் இருந்து ஹீரோ எப்படி மீண்டு வருகிறார் என்பது குறித்த காட்சிகள் இந்த ட்ரெய்லரில் உள்ளன,

இந்த படம் ஆர்ஜே பாலாஜிக்கு மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோகுல் இயக்கத்தில், விவேக் மெரின் இசையில் உருவாகிய இந்த படத்திற்கு எம் சுகுமார் ஒளிப்பதிவும், செல்வா படத்தொகுப்பு பணியும் செய்து உள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.