'உண்மை ஒருநாள் வெல்லும்': ரஜினி பட வழக்கின் அதிரடி தீர்ப்பு

  • IndiaGlitz, [Thursday,January 23 2020]

ரஜினிகாந்த் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த திரைப்படம் லிங்கா. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று மதுரையை சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் அவர்கள் கூறியதாவது:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் 'லிங்கா’. இந்த படத்தை ராக்லைன் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்திருந்தேன்.

லிங்கா படத்தின் கதை, தனது ‘முல்லை வனம் 999’ படத்தின் கதை என்றும், எனது கதையைத் திருடி 'லிங்கா' படத்தை தயாரித்துள்ளனர், அதனால், 'லிங்கா' படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ரவிரத்தினம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தேன். மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் 'லிங்கா' கதை உரிமம் தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்றது. ரூ.10 கோடி காப்புத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு லிங்கா திரைப்படத்தை வெளியிடலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வெளியாகியுள்ளது . ரஜினி சார் படம் வெளியாகும் போது இப்படி எல்லாம் பல இடையூறுகள் வரும். ஆனால் எங்கள் படத்தில் இடம் பெறும் உண்மை ஒருநாள் வெல்லும்.. இந்த உலகம் உன் பேர் சொல்லும் பாடல் வரிகளைப்போல இந்த தீர்ப்பு அமைந்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குறியது’ என ராக்லைன் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
 

More News

ரஜினிக்கு திடீரென ஆதரவு தெரிவித்த அதிமுக அமைச்சர்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெரியார் குறித்து அவமரியாதையாக பேசி விட்டதாக கிட்டத்தட்ட அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

ஜோதிடர் மனைவியுடன் கள்ளக்காதல்: தொழிலதிபருக்கு நேர்ந்த பரிதாபம்

ஜோதிடர் மனைவி ஒருவருடன் கள்ளக்காதல் வைத்திருந்த தொழிலதிபர் ஒருவர் பரிதாபமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சேலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

'அசுரன்' படத்திற்கு விருது கிடைக்காவிட்டால்? பிரபல இயக்குனர் எச்சரிக்கை!

அசுரன் படத்திற்கு விருது கிடைக்கவிலை என்றால் ஒட்டுமொத்தமாக தேசிய விருதையே புறக்கணிப்போம் என இயக்குனரும் நடிகருமான அமீர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வழக்கறிஞரையும் சிறையில் அடையுங்கள்: நிர்பயா வழக்கு குறித்து பிரபல நடிகை!

தலைநகர் டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற மருத்துவ கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில்

அண்ணியுடன் உல்லாசமாக இருந்த கணவர்: திருமணமான 4 மாதத்தில் தற்கொலை செய்த மனைவி!

திருமணமான 4 மாதத்தில் தனது கணவர் அவரது அண்ணியுடன் உல்லாசமாக இருப்பதை கண்டுபிடித்த புதுமணப்பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது