close
Choose your channels

'ரோஜா' நடிகை மதுபாலாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? வைரல் புகைப்படங்கள்..!

Monday, March 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ரோஜா’ படத்தில் நாயகியாக நடித்த மதுபாலாவின் இரண்டு மகள்களின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’அழகன்’ என்ற திரைப்படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்தவர் நடிகை மதுபாலா. அதன் பிறகு ’ரோஜா’ ’ஜென்டில்மேன்’ ’செந்தமிழ்ச்செல்வன்’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களிலும் மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் மதுபாலா கடந்த 1999 ஆம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அமையா மற்றும் கெயா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் மதுபாலாவுக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர். அவர் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களையும் குடும்ப புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் தனது மகள்கள் குழந்தையாக இருக்கும்போது எடுத்த புகைப்படத்தையும் தற்போது குமரிகளாக இருக்கும்போது எடுத்த புகைப்படத்தையும் மதுபாலா பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து நடிகை மதுபாலாவுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? என ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment