இளைஞருடன் நெருக்கமான புகைப்படம்: காவல்துறையில் புகார் அளித்த 'ரோஜா' சீரியல் நடிகை!

  • IndiaGlitz, [Thursday,February 11 2021]

ரோஜா, பாசமலர், பூவே பூச்சூடவா உள்பட பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ஷாமிலி சுகுமார். இவர் தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி அதில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வருவதாக மர்ம நபர் ஒருவர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சின்னத்திரை நடிகை ஷாமிலி சுகுமார் தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தை மர்ம நபர் ஒருவர் தொடங்கியதாகவும் அந்த பக்கத்தில் தன்னைப் பற்றியும் தனது பெற்றோர் குறித்து அவதூறான கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

மர்ம நபரின் போலியான பக்கத்தில் இளைஞர் ஒருவருடன் ஷாமிலி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவரது தாய் தந்தையை பற்றிய அவதூறான கருத்துக்களும் இருப்பதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷாமிலியின் இந்த புகாரை அடுத்து சென்னை மாநகர காவல் துறை அலுவலகத்தில் உள்ள சைபர் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படாத காட்சிகள்: அனிதாவின் வைரல் வீடியோ!

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 24 மணி நேரம் நடந்த சம்பவங்களில் ஒரு மணி நேரம் மட்டுமே தொகுத்து வழங்கியதை நாம் பார்த்தோம்.

விளம்பரம் : வெறும் 2,999 ரூபாய்க்கு வேற லெவல் டிவி!

ஓடிடி வெப்சீரீஸ், சினிமா, டிவியில் பார்க்கும் ஐபிஎல், ரியாலிட்டி ஷோ எல்லாமே தியேட்டர்ல பார்த்தா எப்படி இருக்கும்

சூர்யா எப்படி இருக்கின்றார்? கார்த்தி டுவீட்!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதன் பின் கொரோனாவில் இருந்து குணம் ஆகி விட்டதாகவும்

உறுதியாக அம்மாவின் ஆட்சி தொடரும்: சேலத்தில் முதலமைச்சர்  உறுதி!

மீண்டும் அதிமுக தான் ஆட்சியைப் பிடிக்கும் என்றும், உறுதியாக அம்மாவின் ஆட்சி தொடரும் என்றும் சேலம் மாவட்டம் ஓமலூரில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

தி.மு.கவின் “பி' டீமா சசிகலா?

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா தமிழகம் திரும்பியுள்ள நிலையில், அவருடைய வருகை குறித்து தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள்