தனுஷ் பாடலுடன் 'நாட்டு நாட்டு' பாடலை ஒப்பிட்ட எம்.எம்.கீரவாணி: எந்த பாடல் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,March 29 2023]

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ என்ற பாடலுக்கு சமீபத்தில் ஆஸ்கார் விருது கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்கள் படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இசையமைப்பாளர் எம்எம் கீரவானி அவர்கள் ஆஸ்கர் விருது பெற்ற ’ நாட்டு நாட்டு’ பாடலை தனுஷ் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுடன் ஒப்பிட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ’3’ என்ற படத்தில் இடம் பெற்ற ’ஒய் திஸ் கொலைவெறி’ என்ற பாடலுடன்’ நாட்டு நாட்டு’ பாடலை எம்எம் கீரவானி அந்த பேட்டியில் ஒப்பிட்டார்.

’ஒய் திஸ் கொலைவெறி’ போலவே இந்த பாடலின் வரிகளும் சிறப்பாக, எளிமையாக அமைந்தது என்றும் அதற்காக பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் நடன இயக்குனருக்கு எனது நன்றி என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

'ஒய் திஸ் கொலைவெறி’ பாடலை தனுஷ் எழுதி பாடியிருப்பார் என்பதும் இந்த பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விருது என்ற பாடலை தனுஷின் ஒய் திஸ் கொலைவெறி என்ற பாடலுடன் இசையமைப்பாளர் எம்எம் கீரவானி ஒப்பிட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

'PS 2' இசை வெளியிட்டு விழாவில் கமல்ஹாசனுடன் கலந்து கொள்ளும் பிரபல நடிகர்: ஆச்சரிய தகவல்

 மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

மனைவி, மகன்கள், பேரக்குழந்தைகளுடன் நடிகர் செந்தில்.. லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்..!

தமிழ் திரை உலகின் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் செந்தில் என்பதும் இவர் கவுண்டமணியுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார்

அமெரிக்க டிவி பேட்டியில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை தமிழ்ப்படம் என்று கூறிய நடிகை.. நெட்டிசன்கள் கிண்டல்..!

ஆஸ்கார் விருது பெற்ற எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்'  திரைப்படத்தை தமிழ் படம் என்று பிரபல நடிகை ஒருவர் அமெரிக்க டிவியில் பேட்டியளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கமல்-ரஜினி, அஜித்-விஜய்க்கு இருப்பது எனக்கு இல்லை: கவிஞர் வைரமுத்து

கமல்  - ரஜினி மற்றும் அஜித் - விஜய்க்கு இருக்கும் பிடிமானம் தனக்கு இல்லை என கவிப்பேரரசர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

'PS 2' இசை வெளியிட்டு விழா முடிந்ததும் வெளிநாடு பறக்கும் கமல்ஹாசன்: ஏன் தெரியுமா?

லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் அவர்களின் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த