வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்த பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Tuesday,December 07 2021]

பிரபல நடிகர் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் ஒரு கோடி வழங்கியுள்ள செய்தி சற்று முன் வெளியாகியுள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக தமிழகம், புதுவை, கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்தில் மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் வெள்ள நிவாரண நிதியாக தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று தமிழகம் உள்பட தென்மாநிலங்கள் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் ஆந்திர மாநில அரசின் கோரிக்கையை ஏற்று பிரபல நடிகர் பிரபாஸ் ஆந்திர மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கி உள்ளார். ஏற்கனவே ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, சிரஞ்சீவி, மகேஷ்பாபு உள்ளிட்டோர் தலா 25 லட்சம் ஆந்திர அரசுக்கு வழங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் திருப்பதி உள்பட பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரபாஸ் ரூபாய் ஒரு கோடி அளித்துள்ளதால் ஆந்திர அரசின் மீட்பு பணிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரூ.50 கோடியை நெருங்கும் 'மாநாடு' வசூல்: சென்னையில் மட்டும் இத்தனை கோடியா?

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அதேபோல் வசூல் அளவிலும் இந்தப்படம்

ரஜினிக்கு இந்த தைரியம் இருக்குதா? பிரபல இயக்குனர் கேள்வி!

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இருக்கும் தைரியம் ரஜினிகாந்துக்கு இருக்கின்றதா? என பிரபல இயக்குனர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிக்பாஸ் வீட்டிற்குள் அரசியல் கட்சிகள்: அமர்க்களமாகும் மாநாடு!

மற்ற சீசன்களை விட பிக்பாஸ் சீசன் 5 வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது என்பதும் இந்த சீசனில் அணியாக யாரும் விளையாடாமல் தனித்தனியாக விளையாடி

'வெந்து தணிந்தது காடு': அட்டகாசமான ஸ்டில் வெளியிட்ட சிம்பு!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்ற நிலையில் அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் அடுத்த படமான 'வெந்து தணிந்தது காடு'

ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறுகிறது நயன்தாரா படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

94வது ஆஸ்கார் விருதுக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த திரைப்படம் தகுதி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.