ரூ.500 கோடியை தாண்டிய 'ஜெயிலர்' வசூல்.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,August 25 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டியதாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை உறுதி செய்துள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த பத்தாம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.

இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது என்பதும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இந்த படத்தை கொண்டாடினார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் தற்போது இதுவரை 525 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

மேலும் இது குறித்த போஸ்டரையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது. இன்னும் பல திரையரங்குகளில் ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையிடப்பட்டு வருவதால் ரூ.600 கோடி எட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

அமெரிக்காவில் ஆலோசனை செய்யும் விஜய்-வெங்கட் பிரபு.. காரணம் இதுதானா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 68' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

லிவிங் டுகெதரில் தான் இருக்கிறோம்.. ஆனால்.. பாவனி குறித்து அமீர் விளக்கம்..!

நானும் பாவனியும் லிவிங் டுகெதரில் தான் இருக்கிறோம் ஆனால் நாங்கள் எங்கள் குடும்பத்துடன் இருக்கிறோம் என்று  பிக்பாஸ் போட்டியாளரும் நடன இயக்குனருமான அமீர் தெரிவித்துள்ளார்.

படத்தில் நடிப்பதை விட சம்பளம் அதிகம்? கடை திறப்பு விழாவில் அதிக கவனம் செலுத்தும் ஹனிரோஸ்

ஒரு திரைப்படத்தில் மூன்று அல்லது ஆறு மாதங்கள் கால்ஷீட் கொடுத்து நடிப்பதை விட ஒரு சில மணி நேரங்கள் சென்று கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டால் அதிக சம்பளம் கிடைக்கிறது என்பதால் நடிகை

ஆகஸ்ட் 28, செப்.10: அடுத்தடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ஜெயம் ரவி..!

ஜெயம் ரவி ஏற்கனவே 4 திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான 'தனி ஒருவன்'  திரைப்படத்தின் அறிவிப்பு வரும் 28ஆம் தேதி வெளியாகும் என்பதை ஏற்கனவே

தேவிஸ்ரீ பிரசாத்தை மட்டுமல்ல, அனைவரையும் மனதார வாழ்த்திய கமல்ஹாசன்.. வைரல் அறிக்கை..!

 நேற்று 69 வது தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக உலக நாயகன் கமல்ஹாசன்  சிறந்த இசையமைப்பாளர் என்ற தேசிய விருது