close
Choose your channels

ரூ.500 கோடியை தாண்டிய 'ஜெயிலர்' வசூல்.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Friday, August 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டியதாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை உறுதி செய்துள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த பத்தாம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.

இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது என்பதும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இந்த படத்தை கொண்டாடினார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் தற்போது இதுவரை 525 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

மேலும் இது குறித்த போஸ்டரையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது. இன்னும் பல திரையரங்குகளில் ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையிடப்பட்டு வருவதால் ரூ.600 கோடி எட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment