'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யார்?

  • IndiaGlitz, [Saturday,June 09 2018]

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே. தொலைக்காட்சி சீரியலுக்கு அடிமையாகி இருந்தவர்கள் கூட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் ரசித்து பார்த்ததே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு சான்றாக இருந்தது.

இந்த நிலையில் 'பிக்பாஸ் 2' வரும் 17ஆம் தேதி முதல் தினமும் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருக்கும் நிலையில் இதில் போட்டியிடும் போட்டியாளர்கள் யார் யார்? என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவரிடத்திலும் உள்ளது.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மொத்தம் 20 பேர் கலந்து கொள்ளவுள்ள நிலையில் இவர்கள் 7 பேர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. வடிவேல் பாலாஜி, சினேகா, ரியாஸ்கான், ரியோ ராஜ், நடிகை ரம்பா, கலக்க போவது யாரு' புகழ் பாலா, நடிகர் கிருஷ்ணா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக வதந்திகள் வெளிவந்துள்ளது.

மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் யார் யார் என்பது உண்மையில் நிகழ்ச்சி தொடங்கும் தினத்தன்றே அதிகாரபூர்வமாக தெரியவரும்

More News

'விஜய் 62' படத்தில் 'விக்ரம் வேதா' நடிகர்

விஜய் நடித்து வரும் 'விஜய் 62' திரைப்படத்தின் படப்பிடிப்பை ஏ.ஆர்.முருகதாஸ் விறுவிறுப்புடன் நடத்தி வருகிறார். தற்போது சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் அரசியல் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.

'கோலி சோடா'வுக்காக கொடி பிடித்த சூர்யா

இயக்குனர், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கியுள்ள 'கோலி சோடா 2' படம் வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் காலா செய்த சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனம் மற்றும் பெருவாரியான வசூலை பெற்று கொண்டிருக்கின்றது.

'காலா'வின் வெற்றி அரசியல் களத்திலும் கிடைக்குமா? அமைச்சர் ஜெயகுமார் பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'காலா' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி வெற்றிப்படமாக உருவெடுத்துள்ளது.

கமலுக்கு உதவி செய்யும் ஸ்ருதிஹாசன், அமீர்கான், ஜூனியர் என்.டி.ஆர்

கமல்ஹாசன் அரசியல் கட்சியை தொடங்கி அரசியல் பணியில் பிசியாக இருந்தாலும், அவர் நடித்து கொண்டிருக்கும் படங்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான பணிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார்.