close
Choose your channels

கமலுக்கு உதவி செய்யும் ஸ்ருதிஹாசன், அமீர்கான், ஜூனியர் என்.டி.ஆர்

Friday, June 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமலுக்கு உதவி செய்யும் ஸ்ருதிஹாசன், அமீர்கான், ஜூனியர் என்.டி.ஆர்

உலக நாயகன் கமல்ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கி அரசியல் பணியில் பிசியாக இருந்தாலும், அவர் நடித்து கொண்டிருக்கும் படங்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான பணிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் கமல் நடித்து முடித்து விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் 'விஸ்வரூபம் 2'. இந்த படம் சென்சார் சான்றிதழை பெற்று ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவரும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் 11ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தின் தமிழ் டிரைலரை அவரது மகள் ஸ்ருதிஹாசனும், இந்தி பதிப்பை அமீர்கானும், தெலுங்கு பதிப்பை ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிடவுள்ளனர். இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படமான 'விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலரை கமல் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.