ஆக்சிஜனுக்காக சச்சின் டெண்டுல்கர் ரூ.1 கோடி நன்கொடை!

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுகாதாரக் கட்டமைப்பு மோசம் அடைந்து உள்ளது. அதிலும் கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதி இல்லாமலும் போதிய ஆக்சிஜன் இல்லாமலும் பல மாநிலங்களில் அவதியுற்று வருகின்றனர். இதனால் பல உலகநாடுகள் தற்போது இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டவும் தயாராகி உள்ளன.

இந்நிலையில் போதிய ஆக்சிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்து இந்தியா முழுக்க உள்ள மருத்துவமனைகளுக்கு அதைக் கொண்டு சேர்க்கும் வகையில் “மிஷன் ஆக்சிஜன்” எனும் நிறுவனம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்திற்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளதாக அவரே டிவிட்டரில் தகவல் வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்த பதிவில் சச்சின் “நான் விளையாடும் போது நீங்கள் அளித்த ஆதரவு விலைமதிப்பற்றது. அது எனக்கு வெற்றிபெற உதவியது. அதேபோல் இன்று இந்த நோய்த்தொற்றை எதிர்த்துப் போராட கடுமையாக உழைக்கும் அனைவருக்கும் பின்னால் நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்’‘ எனக் கூறியுள்ளார்.

மேலும் மிஷன் ஆக்சிஜன் எனும் அமைப்பானது 250 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோரால் உருவாக்கப்பட்ட ஒரு குழு என்பதையும் இந்தக் குழு ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்து தேவையான மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் வேலையை செய்து வருவதாகவும் சச்சினே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்கள் முயற்சி விரைவில் இந்தியா முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளுக்கு சென்று அடைய வேண்டும் என்ற நம்பிக்கையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

More News

'பாக்காதே பாக்காதே' பாடலுக்கு ஆடிய நடிகையா இவர்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

இயக்குநர் ஷங்கர் இயக்கிய முதல் திரைப்படமான 'ஜென்டில்மேன்' படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தவர் நடிகை சுபஸ்ரீ. இந்த படத்தில் இவர் அர்ஜுனுடன் இணைந்து 'பார்க்காதே பார்க்காதே

மே 2 வாக்கு எண்ணிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

2 வருடம் ஸ்கிரிப்ட்-க்காக கடின உழைப்பு போட்ட கே.வி. ஆனந்த்....! ஓகே சொன்ன சிம்பு...ஆனால்...?

இயக்குனர்  கேவி. ஆனந்த்-ன்  இறப்பு தமிழ் திரையுலகினரை மட்டுமில்லாமல், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா விதிமுறைகளை மதிக்காத திருமணம்… ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி!

சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் நேற்று 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக வந்த தகவலை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்

கோவேக்சின் விலையை குறைத்த பாரத் நிறுவனம்....! நல்ல செய்திப்பா...!

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை குறைத்ததை தொடர்ந்து, கோவேக்சின் தடுப்பூசியின் விலையையும் நிறுவனம் குறைத்துள்ளது.