close
Choose your channels

பிரதமர் மோடிக்கு கதை சொன்ன சச்சின் தெண்டுல்கர்

Friday, May 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கிரிக்கெட் உலக சூப்பர் ஸ்டார் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வரும் 26ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. தமிழ் உள்பட பல மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சச்சின் தெண்டுல்கரும் இந்த படத்தின் புரமோஷனுக்காக விஐபிக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் சற்று முன்னர் சச்சின், பாரத பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது 'சச்சின்' படத்தின் கதையை பிரதமர் மோடி ஆர்வத்துடன் கேட்டதாகவும் அதற்கு தனது நன்றி என்றும் சச்சின் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிடும்போது, 'சச்சினுடன் ஒரு நல்ல சந்திப்பு நடந்தது. அவரது வாழ்க்கை பயணம், சாதனைகள் அனைத்தும் ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைப்பதோடு 125 கோடி இந்தியர்களையும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.