ஜோக்கர்' படத்திற்கு சகாயம் ஐ.ஏ.எஸ். கொடுத்த விமர்சனம்

  • IndiaGlitz, [Saturday,August 20 2016]

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கிய 'ஜோக்கர்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இப்போதைக்கு ஒரு திரைப்படம் இந்த அளவுக்கு அதிக அளவிலான விஐபிக்கள் பாராட்டியதாக தெரியவில்லை. திரைப்படம் பார்க்கும் பழக்கமே இல்லாத விஐபிக்கள் கூட இந்த படத்தை பார்த்து படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஊழலை எதிர்த்து போராடும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்ற பெயர் பெற்ற சகாயம் ஐஏஎஸ் அவர்கள் சமிபத்தில் இந்த படத்தை பார்த்து ராஜூமுருகனுக்கும் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இந்த படம் குறித்து கூறியதாவது:
ராஜுமுருகனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஜோக்கர் திரைப்படம் சமூக அவலங்களை தெளிவாக எடுத்துகாட்டுவதோடு மட்டுமல்லாது , சமூக அவலங்களுக்கு அநீதிகளுக்கு எதிராக போராடுபவர்களை இந்த சமூகம் பார்க்கிற விதத்தை அது சுட்டி காட்டுகிறது. குறிப்பாக சமூக அநீதிகள், துடைத்தெறிய வேண்டிய ஊழல் போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராக போராடுபவர்களை இந்த சமூகம் ஜோக்கர்களாக கோமாளிகளாக பார்க்ககூடிய இந்த இழந்த மனநிலை மாறவேண்டும் என்ற பாடத்தை மிக அற்புதமாக இந்த படம் எடுத்து சொல்கிறது.
எனவே தமிழ் சமூகம் ஆதிரிக்க வேண்டிய இலக்கியம் போன்ற காவியம் போன்ற ஒப்பற்ற படம் ஜோக்கர். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் பார்க்கவேண்டிய அற்புதமான, தமிழ் சமூகம் ஆதரிக்க வேண்டிய படைப்பு என்று கூறியுள்ளார்.

More News

சிவகார்த்திகேயன் - பொன்ராம் படத்தின் மொத்த டீம் இதுதான்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய வெற்றி படங்களை அடுத்து மூன்றாவது முறையாக பொன்ராம்-சிவகார்த்திகேயன் ...

இந்தியாவின் வெள்ளி மங்கைக்கு ரசிகராக மாறிய ரஜினிகாந்த்

பிரான்ஸ் நாட்டின் ரியோ நகரில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே சாக்சி மாலிக் வெண்கல பதக்கம்...

விஷாலின் மற்றுமொரு சமூக சேவை

நடிகர் சங்க செயலாளரும் பிரபல நடிகருமான விஷால், நலிந்த நடிகர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும்...

சூர்யாவின் வில்லனாக மாறிய நிஜ பைலட்

சூர்யாவின் சகோதரர் கார்த்தி, மணிரத்னம் இயக்கி வரும் 'காற்று வெளியிடை' படத்தில் பைலட்டாக நடித்து வரும் நிலையில், சூர்யா...

'ஜோக்கர்' ராஜூமுருகன் என்னிடம் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை. லிங்குசாமி

பிரபல பத்திரிகையாளரான ராஜூமுருகன் தனது முதல் படமான 'குக்கூ' படத்திலேயே தனது தனித்திறமையை நிரூபித்த நிலையில் அவருடைய இரண்டாவது படமான 'ஜோக்கர்'...