மெரீனா போராட்டத்தில் சகாயம். இளைஞர்கள் உற்சாக வரவேற்பு

  • IndiaGlitz, [Saturday,January 21 2017]

முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல்கலாமுக்கு பின்னர் இளைஞர்கள் பெரிதும் மதிக்கும் ஒரு நபராக கருதப்படுபவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். இவருடைய நேர்மை, துணிவு மாணவர்களை ஈர்த்தது.
இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக ஜல்லிக்கட்டுக்காக தொடர்ந்து போராடி வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு சற்றுமுன்னர் சகாயம் ஐஏஎஸ் நேரில் வந்து மாணவர்களை பாராட்டியதோடு உற்சாகப்படுத்தினார்.
அரசியல்வாதிகளை நெருங்கவிடாமல் செய்த மாணவர்கள், சகாயம் அவர்களுக்கு சிவப்புக்கம்பளம் கொடுத்து உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர்.
ஏற்கனவே சகாயம் அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த பொங்கல் தினத்தில் நாமக்கல்லில் நடந்த விழா ஒன்றில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மெரீனா போராட்டத்தில் சகாயம். இளைஞர்கள் உற்சாக வரவேற்பு

முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல்கலாமுக்கு பின்னர் இளைஞர்கள் பெரிதும் மதிக்கும் ஒரு நபராக கருதப்படுபவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். இவருடைய நேர்மை, துணிவு மாணவர்களை ஈர்த்தது...

உங்களை உலகமே பின்பற்ற போகிறது. இளைஞர்களுக்கு இசைஞானி வாழ்த்து

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனா, மதுரை தமுக்கம் மைதானம், அலங்காநல்லூர், உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவர்கள் போராடி வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு திரையுலகினர் உள்பட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் கொடுத்த விக்கீபிடியா

ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூர் போன்ற ஒருசில இடங்களில் மட்டும் நடந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டை, தடை செய்ய வேண்டும் என்று பீட்டா எடுத்த நடவடிக்கை காரணமாக இன்று உலகம் முழுவதும் ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்பதை தெரியவைத்துவிட்டது.

தமிழக அரசின் அவசர சட்டத்தில் காளைகள் நீக்கும் சட்டப்பிரிவு சேர்ப்பு

ஜல்லிக்கட்டுக்காக தற்போது இயற்றப்படவுள்ள அவசர சட்டம் நிரந்தர தீர்வு ஆகாது என்றும் இந்த வருடம் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த உதவும் என்றும்...

7 நாளில் மன்னிப்பு. பீட்டா நிர்வாகிக்கு சூர்யா வழக்கறிஞர் நோட்டீஸ்

ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிரியான பீட்டா அமைப்பு சமீபத்தில் நடிகர் சூர்யா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...