நீட் தேர்வால் தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை!

  • IndiaGlitz, [Saturday,November 06 2021]

சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் வெற்றி பெற்று உள்ளனர் என்பதும் தமிழகத்தை சேர்ந்த மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீட்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வராததால் சேலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல் என்ற பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் சமீபத்தில் நடந்த நீட் தேர்வு எழுதினார்.

இந்த தேர்வில் அவர் எதிர்பார்த்தை விட குறைவான மதிப்பெண் வந்ததால் கடந்த 1ஆம் தேதி அவர் மனவேதனை அடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை அடுத்து அவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்து உள்ளார். இதனால் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு அச்சம் காரணமாக தேர்வு அன்றும், தேர்வுக்கு பின்னரும் ஒருசில மாணவிகள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ஜெய்பீம்' வெற்றி எதிரொலி: பழங்குடியின மாணவிகளுக்கு உதவிய விஜய், சூர்யா ரசிகர்கள்!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் வெளியான பிறகு பழங்குடியின மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு

கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டார்… துணை பிரதமர் மீது பிரபல வீராங்கனை குற்றச்சாட்டு!

சீனாவின் முன்னாள் துணை பிரதமர் சாங் காவோலி தன்னை கட்டாயப்படுத்தி

மார்க் சக்கர்பெர்க் எவ்வளவு பவர் ஃபுல் தெரியுமா? வைரலாகும் தகவல்!

ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த சில வருடங்களாக உலகம் முழுவதும் பல்வேறு தரப்புகளில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

ஆண் நண்பருடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ருதிஹாசன்: வைரல் புகைப்படம்!

பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் தனது ஆண் நண்பருடன் தீபாவளியை கொண்டாடியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷசாராயம் அருந்தி பலர் உயிரிழப்பு… தீபாவளியில் நடந்த சோகம்!

பீகார் மாநிலத்தில் விஷசாராயம் அருந்தி 24 பேர் உயிரிழந்து விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.