சல்மான்கானின் சுல்தான்' செய்த மிகப்பெரிய சாதனை

  • IndiaGlitz, [Thursday,August 11 2016]

இந்தியாவில் தயாராகும் திரைப்படங்கள் ரூ.100 கோடி வசூல் ஆனாலே வெற்றி படங்களாக கருதப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்திய படங்கள் சர்வசாதாரணமாக ரூ.200 கோடி முதல் ரூ.500 கோடி வரை வசூலாகி வருகிறது. பாகுபலி, கபாலி போன்ற படங்கள் இதற்கு உதாரணங்கள். அதற்கு முக்கிய காரணம், இந்திய படங்களின் உலகளாவிய வியாபாரம்.
இந்நிலையில் கடந்த ரம்ஜான் தினத்தில் வெளியாகிய சல்மான்கானின் சுல்தான் திரைப்படம் ரூ.300 கோடி கிளப்பில் இணைந்து சாதனை செய்துள்ளது. ஏற்கனவே சல்மான்கானின் பாஜ்ராங்கி பைஜான்' ரூ.300 கோடி வசூல் செய்திருந்த நிலையில் தற்போது 'சுல்தானும்' ரூ.300 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.
இதேபோல் இந்த படத்தின் நாயகி அனுஷ்காசர்மாவுக்கும் இது இரண்டாவது ரூ.300 கோடி வசூல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அமீர்கானுடன் அனுஷ்கா நடித்த 'பிகே' ரூ.300 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

More News

இன்று மாலை சிவகார்த்திகேயன் சிங்கிள் பாடலை வெளியிடவுள்ளார்

பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் திரையுலக கிராப் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து தற்போது உச்சத்தை அடைந்துள்ளது...

'கபாலி' ரஜினி படமும் இல்லை, ரஞ்சித் படமும் இல்லை. சொல்வது யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து, படையப்பா, லிங்கா ஆகிய படங்களை இயக்கிய ராசியான இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். ரஜினியின் படங்களை இயக்கியது...

'மங்காத்தா 2', கேஷுவல் விஜய், 'பில்லா 2'. வெங்கட்பிரபுவின் கனவுகள்

'சென்னை 600028' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெங்கட்பிரபு, தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகளை கிட்டத்தட்ட முடித்துவிட்டார்...

ஸ்ருதிஹாசனின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'பிரேமம்' திரைப்படம் தெலுங்கிலும் அதே டைட்டிலில் உருவாகி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே...

அஜித்துக்கு குரல் கொடுக்க ஆசை: தனுஷ்

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பலவித அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் ஜொலித்து வருபவர்...