close
Choose your channels

இன்று மாலை சிவகார்த்திகேயன் சிங்கிள் பாடலை வெளியிடவுள்ளார்

Thursday, August 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் திரையுலக கிராப் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. அவர் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள 'ரெமோ' படத்தின் உரிமையை வாங்க விநியோகிஸ்தர்கள் போட்டி போட்டு வருகின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் வெற்றி அடைந்தால் அவருடைய மார்க்கெட் பலமடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எவ்வளவு உச்சத்திற்கு சென்றாலும் அவரது எளிமை, எளிதில் அணுகும் தன்மை, பந்தா இல்லாத குணம் ஆகியவை அனைவரையும் கவர்ந்துள்ளது. இதனால் பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களின் ஃபர்ஸ்ட்லுக், டீசர், டிரைலர், பாடல்கள் ஆகியவற்றை வெளியிட்டு தருமாறு சிவகார்த்திகேயனிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர். அவரும் முகம் சுளிக்காமல் அவர்களது வேண்டுகோளை நிறைவேற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு சிவகார்த்திகேயன் 'சகா' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'யாயும்' என்று தொடங்கும் சிங்கிள் பாடலை வெளியிடவுள்ளார். சிங்கப்பூரை சேர்ந்த ஷபீர் இசையமைத்துள்ள இந்த பாடல் அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முருகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சகா' திரைப்படத்தில் சரண், கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, பிரித்விராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.