close
Choose your channels

சமந்தாவின் மாஸ் ரீஎண்ட்ரி.. பிரபல நடிகர், ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் படத்தில் ஒப்பந்தம்?

Monday, February 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா தனது உடல் நலக்குறைவு காரணமாக நடிப்பிலிருந்து சில மாதங்கள் விலகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி ஆகி இருப்பதாகவும், மாஸ் நடிகர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை சமந்தா சமீபத்தில் மயோசிட்டி சென்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் ஏற்கனவே நடித்து முடித்து இருந்த ’சாகுந்தலம்’ ’குஷி’ உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகின.

இந்த நிலையில் சிகிச்சை முடியும் வரை வேறு படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த சமந்தா, உடல் நலனில் முழு அக்கறை செலுத்தி வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் கிட்டத்தட்ட நோயில் இருந்து மீண்டு விட்டதாகவும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ராஜ்&டிகே இயக்கத்தில் உருவாகும் ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடித்து வரும் சமந்தா, தற்போது ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் நாயகி ஆக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தெரிகிறது. புஜ்ஜி பாபு இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகயிருக்கும் இந்த படத்தில் சமந்தாவும் இணைந்துள்ளதை அடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராம்சரண் தேஜாவின் 16 வது படமாக உருவாக இருக்கும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos