close
Choose your channels

போட்டோகிராபர் கொடுத்து வச்சவர்.. சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!

Thursday, April 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ’போட்டோகிராபர் ஆவது எப்படி’ ’போட்டோகிராபர் கொடுத்து வச்சவர்’ போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

நடிகை சமந்தா கடம்பா 2010 ஆம் ஆண்டு சிம்பு, த்ரிஷா நடித்த ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் ’பானா காத்தாடி’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இதனை அடுத்து அவர் விஜய் உட்பட பல தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நிலையில் தெலுங்கிலும் பிரபலமானார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் நடிக்க தொடங்கிவிட்டார் என்பதும் குறிப்பாக பாலிவுட்டில் உருவாகி வரும் வெப் தொடரில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் திரையில் நடிக்க விட்டாலும் இன்ஸ்டாகிராமில் சமந்தா ஆக்டிவாக இருப்பார் என்பதும் அவரது பக்கத்திற்கு 34 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் சமந்தா உள்ளாடை அணியாமல் கோட் மட்டும் அணிந்து எடுத்த புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. ’போட்டோகிராபர் ஆவது எப்படி’ ’போட்டோகிராபர் கொடுத்து வச்சவர்’ ’அடிக்கிற வெயிலுக்கு இந்த அட்ரஸ் தான் சரியாக இருக்கும்’ போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

மேலும் இந்த புகைப்படங்கள் பதிவாகி ஒரு சில நிமிடங்களே ஆகி உள்ள நிலையில் லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.