close
Choose your channels

காதல் கதையை கேட்ட தொகுப்பாளினி.. விசில் போட்டு பாட்டு பாடிய சமந்தா..!

Thursday, March 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொகுப்பாளினி ஒருவர் சமந்தாவிடம் காதல் கதையை கேட்க உடனே அவர் விசில் அடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் சென்னை அணிக்காக நடிகை சமந்தா விசில் போட்ட வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான உங்கள் காதல் கதையை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டபோது ’ஏற்கனவே நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு ஹாட் பாடலை பாடிவிட்டேன்’ என்று கூறி ’சென்னை சூப்பர் சூப்பர் கிங்சுக்கு பெரிய விசில் அடிங்க, நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க’ என்று பாட்டு பாடினார். அதன் பின்னர் தொகுப்பாளினி கேட்டுக் கொண்டதற்கு சமந்தா மற்றும் விஜய் தேவரகொள்ள ஆகிய இருவரும் சென்னை அணிக்காக ஒரு விசில் அடித்தனர்.

அதன் பின்னர் சென்னை கிங்ஸ் அணி குறித்து சமந்தா கூறியபோது, ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனக்கு ரொம்பவே பிடிக்கும் , குறிப்பாக தோனி குறித்து கொஞ்சம் குழப்பம் எல்லோருக்கும் வந்திருக்கும், தோனி சென்னையா? என்று நகைச்சுவையாக கேள்வி எழுப்ப, அதற்கு தொகுப்பாளினி ‘ஆமாம் தோனி சென்னை தான்’ என்று கூற சமந்தா சிரிக்கும் காட்சிகளும் இந்த வீடியோவில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment