close
Choose your channels

முன்னோக்கி செல்லுங்கள்: சமந்தாவின் புத்தாண்டு தீர்மானம்..

Thursday, December 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் புத்தாண்டு தீர்மானம் குறித்து பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’பாணா காத்தாடி’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதன் பின் அஜீத், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் என்பதும் ஒரு சில படங்களில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் விவாகரத்துக்கு பின்னரும் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா, தற்போது ’சாகுந்தலம்’ ’குஷி’ உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் சற்று முன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் புத்தாண்டு வாழ்த்து குறித்து பதிவு செய்துள்ளார். முன்னோக்கி செயல்படுங்கள்.. நம்மால் முடிந்த வரை கட்டுப்படுத்துங்கள்.. புதிய மற்றும் எளிதான தீர்மானங்களை எடுத்து கொள்ளுங்கள். நம் மீது அன்பாகவும் மென்மையாகவும் இருக்கும் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார்! 2023ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்! என பதிவு செய்துள்ளார் .இந்த பதிவிற்கு லைக் செய்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.