close
Choose your channels

சமந்தாவின் இன்னொரு படத்தின் அறிவிப்பு: இரட்டை இயக்குனர்கள்!

Friday, October 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகையாக இருந்து வரும் நடிகை சமந்தா, பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும், தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை சாந்தரூபன் இயக்க உள்ளார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.

இந்த நிலையில் சமந்தா நடிக்கும் இன்னொரு திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் கிருஷ்ணபிரசாத் அவர்களின் தயாரிப்பில் ஹரீஷ் நாராயணன் மற்றும் ஹரி சங்கர் ஆகிய இரட்டையர்கள் இயக்கும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளார்.

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படம் ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் 14வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் கூடுதல் விவரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பில் சமந்தா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை சமந்தா நடிக்கும் இரண்டு திரைப்படங்களின் அறிவிப்பு இன்று ஒரே நாளில் வெளியாகி உள்ளது சமந்தா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment