close
Choose your channels

சமந்தாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..! இந்த ஆண்டின் முதல் வெற்றி கிடைக்குமா?

Sunday, July 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமந்தா நடித்த ’யசோதா’ மற்றும் ’சாகுந்தலம்’ ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த திரைப்படமான ’குஷி’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. இந்த படத்தின் மூலம் சமந்தாவுக்கு இந்த ஆண்டின் முதல் வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்த ’குஷி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படம் செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எனவும், ஆகஸ்ட் 31ஆம் தேதி அமெரிக்காவில் பிரிமியர் காட்சி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தா நடித்த ’யசோதா’, ‘சாகுந்தலம்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தாவுக்கு இருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருப்பதால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவா நிவாரனா இயக்கத்தில் ஹேசம்அப்துல் வாகப் இசையில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், வெண்ணிலா கிஷோர், லட்சுமி, ரோகினி, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு முரளி ஒளிப்பதிவும், ப்ரவின்புடி படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos