close
Choose your channels

கடலை பார்த்தபடி காஃபி, புத்தகம்… துருக்கி சென்ற நடிகை சமந்தாவின் வைரல் புகைப்படங்கள்

Tuesday, June 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை சமந்தா பற்றிய தகவல்கள் எப்போதும் ரசிகர்களிடம் புது உற்சாகத்தை ஏற்படுத்தும். ஆனால் தற்போது அவர் பகிர்ந்துகொண்டுள்ள இன்ஸ்டா புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் ஏராளமான லைக்ஸ்களை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

தென்னிந்திய சினிமாவில் முக்கிய பிரபலமாக இருந்துவரும் நடிகை சமந்தா தற்போது ஹாலிவுட்டில் வெளியாகி உலகம் முழுக்க பிரபலமாகி இருக்கும் ‘சிட்டாடல்’ எனும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இந்த சீரிஸை ‘தி ஃபேமலி மேன்’ வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே எனும் இரு இயக்குநர்கள் இயக்கி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘குஷி’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் “தி அரெஞ்ச்மெண்ட் ஆஃப் லவ் ஸ்டோரி‘- ‘சென்னை ஸ்டோரி’ என்று பெயரிடப்பட்டுள்ள ஹாலிவுட் திரைப்படத்திலும் இவர் ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படி தமிழ், தெலுங்கு அடுத்து பாலிவுட் தற்போது ஹாலிவுட் என்று படிப்படியாக முன்னேறிவரும் நடிகை சமந்தாவை எப்போதும் ரசிகர்கள் கொண்டாடியே வருகின்றனர்.

அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளியாகிய ‘சாகுந்தலம்’ திரைப்படம் ‘சிறந்த இந்திய திரைப்படம்’, ‘சிறந்த ஆடை வடிவமைப்பு‘ என்று 4 பிரிவுகளில் கேன்ஸ் விருதுகளை அள்ளிக் குவித்திருந்தது. இந்நிலையில் க்யூட்டான நடிப்பு, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்று சினிமாவில் தனது முத்திரையைப் பதித்துவரும் நடிகை சமந்தா தற்போது துருக்கி நாட்டிற்கு சென்றுள்ளார்.

‘குஷி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில் நடிகை சமந்தா கடலை பார்த்தபடியே காஃபி, காரில் அமர்ந்த படி புத்தகம் வாசிப்பு, தனக்குப் பிடித்த உணவு என்று விதவிதமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் 15 லட்சத்திற்கும் மேல் லைக்ஸ்களைக் குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.