close
Choose your channels

எந்தவித உபகரணங்களும் இல்லாமல் வொர்க்-அவுட் சமந்தா: வேற லெவல் வீடியோ வைரல்

Tuesday, January 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா பிஸியான நடிகை என்றாலும், இந்த பிஸியான நேரத்திலும் அவர் உடற்பயிற்சி செய்வதில் தவறுவதே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன் சமந்தா வெளியிட்டுள்ள வீடியோ பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

பொதுவாக ஜிம்முக்கு சென்றால் கடினமான உபகரணங்களை பயன்படுத்தி ஒர்க்கவுட் செய்வது வழக்கமான ஒன்றாக இருக்கும். ஆனால் எந்தவித உபகரணங்களையும் பயன்படுத்தாமல் சமந்தா செய்யும் ஒர்க் அவுட் வீடியோ அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சமந்தா தற்போது ’காத்துவாக்குல இரண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் ’யசோதா’ உள்பட 4 திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் 2022ஆம் ஆண்டில் அவர் நடித்து வரும் அனைத்து படங்களும் ரிலீஸ் ஆகி அவர் திரையுலகின் உச்சத்துக்கு செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.