வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது: சமுத்திரக்கனியின் பதிலடியால் தொடரும் பிரச்சனை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’பருத்திவீரன்’ பட இயக்குனர் அமீர் மீது சர்ச்சைக்குரிய வகையில் ஞானவேல் ராஜா பேசிய நிலையில் அது குறித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என திரையுலகினர் வலியுறுத்தினார். இதனை அடுத்து ஞானவேல் ராஜா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
ஆனால் இந்த வருத்தத்திற்கும் இயக்குனர் சசிகுமார் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சமுத்திரக்கனியும் கண்டனம் தெரிவித்திருப்பதால் இந்த பிரச்சனை முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே உள்ளது. சமுத்திரகனி இது குறித்து கூறியிருப்பதாவது:
”பிரதர்... இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது...
நீங்க செய்ய வேண்டியது..
எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ... அதே பொது வெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்..!
நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்...!
அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா... கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு...
அப்புறம் "பருத்திவீரன்" திரைப்படத்தில் வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்... அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க... நீங்கதான், "அம்பானி பேமிலியாச்சே..!"
காலம் கடந்த நீதி..! மறுக்கப்பட்ட நீதி..! ”
அறம் வெல்லும்… வெல்வோம் pic.twitter.com/0NiNIomJTx
— P.samuthirakani (@thondankani) November 30, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com