மீண்டும் தனுஷ் படத்தில் இணையும் பிரபல ஹீரோ: அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,January 08 2021]

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷின் 43வது படமான 'D43' என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதை பார்த்தோம். இந்தப் படத்தின் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த பாடலுக்காக தனுஷ் ரிகர்சல் செய்யும் புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தனுஷின் 'D43' திரைப்படத்தில் மாளவிகா மேனன் நாயகியாகவும் முக்கிய கேரக்டர் ஒன்றில் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம் தற்போது இந்த படத்தில் பிரபல ஹீரோ சமுத்திரகனி இணைந்துள்ளார் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

ஏற்கனவே தனுஷ் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் ’வேலையில்லா பட்டதாரி’, ’வேலையில்லா பட்டதாரி 2’ மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் இணைந்து நடித்து உள்ளனர் என்பதும் இதனை அடுத்து 'D43' திரைப்படத்தின் மூலம் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாக உள்ள இந்த படம் தனுஷின் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

பிரபல இயக்குனரின் மைத்துனரை திருமணம் செய்த கயல் ஆனந்தி!

தமிழ் நடிகை ஆனந்திக்கு திருமணம் நடைபெற இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே  பார்த்தோம். இந்த நிலையில் அவர் பிரபல இயக்குனர் ஒருவரின் மைத்துனரை திருமணம் செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

யார் யாருக்கு எந்த வாக்கியம்: டாஸ்க்கின் முடிவுகள்!

பிக்பாஸ் வீட்டில் நடந்த வாக்கியம் பொருத்தம் டாஸ்கில் ஒவ்வொருவருக்கும் வந்த வாக்கியம் யாருக்கு பொருந்துகிறதோ அவர்களுடைய கட்-அவுட்டில் ஒட்ட வேண்டும்

பாலாஜிக்கு பிக்பாஸ் கொடுத்த ஸ்பெஷல் பவர் இதுதானா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் 'டிக்கெட் டு ஃபினாலே' டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த டாஸ்க்கின் இறுதிகட்டம் நடைபெறுகிறது.

பிக்பாஸ் வீட்டில் 'அணைப்பு' கொஞ்சம் ஓவர்தான்: ஒரு இசையமைப்பாளரின் பதிவு!

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போதோ, வருத்தத்தில் இருக்கும்போதோ அல்லது டாஸ்க்கில் வெற்றி பெற்றாலோ ஒருவரை ஒருவர் அணைத்து கொள்வது சர்வசாதாரணமாக

பாலாவை நிறைய தடவை ட்ரை பண்ணியிருக்கேன்: 'கூடிப்பிரியேல்'க்கு க்யூட் விளக்கம் தந்த கேபி!

பிக்பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் 'டிக்கெட் டு ஃபினாலே' டாஸ்க் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது என்பது தெரிந்ததே. இந்த சுற்றில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு வாக்கியம் கொடுக்கப்பட்டு