'அப்பா'வுக்காக சலுகைக்கட்டணம் வாங்கித்தந்த தலைமை ஆசிரியர்

  • IndiaGlitz, [Tuesday,July 12 2016]

சமுத்திரக்கனி இயக்கி, தயாரித்து நடித்த 'அப்பா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. ஒவ்வொரு அப்பாவும் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று அனைத்து விமர்சனங்களும் பாராட்டியுள்ளது.
இந்நிலையில் கோபிப்பாளையம் தூய திரேசாள் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் சுற்றறிக்கையை விடுத்துள்ளார்.
அந்த ஊரில் உள்ள ஸ்ரீவள்ளி திரையரங்கில் 'அப்பா' படம் ஓடுவதாகவும், ஒவ்வொரு அப்பாவும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இந்த படத்திற்காக திரையரங்கு நிர்வாகிகளிடம் பேசி சலுகைக்கட்டணம் பெற்றுள்ளதாகவும் இந்த சலுகையை பயன்படுத்தி ஒவ்வொரு அப்பாவும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரு திரைப்படத்திற்கு இதைவிட வேறு கெளரவம் வேண்டுமா? இதுவரை இந்த படத்தை பார்க்காத அப்பாக்கள் இருந்தால் கண்டிப்பாக போய் பாருங்கள்..

More News

செஞ்சுரி அடித்தது சந்தானத்தின் 'தில்லுக்கு துட்டு'

கடந்த வாரம் வெளியான சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று நான்கே நாட்களில் ரூ.13.5 கோடி வசூல் செய்தது...

இரண்டு பெரிய வாய்ப்புகளை தவறவிட்ட சாய்பல்லவி

'பிரேமம்' படத்தின் மலர் கேரக்டர் மூலம் இளைஞர்களின் மனதில் குடிபுகுந்த சாய்பல்லவியை தேடி பல வாய்ப்புகள் கோலிவுட்...

நள்ளிரவில் ஹன்சிகா செய்தது என்ன? வைரலாகும் வீடியோ

நடிகை ஹன்சிகா திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ஈடுபடும் தன்மை கொண்டவர் என்பதை அவ்வப்போது வரும் செய்திகளை பார்த்து வருகிறோம்...

'காற்று வெளியிடை'யில் இணைந்த பழம்பெரும் நடிகர்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

உலகின் முதல் 'கபாலி' காட்சி எங்கு எத்தனை மணிக்கு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் ரிலீஸ் தேதி ஒருவழியாக ஜூலை 22 என்று கன்பர்ம் ஆகிவிட்ட நிலையில் அனைவரும் அந்த தேதி எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்...