விஜய் படத்தை கிண்டல் செய்த நடிகர்: ரசிகர்களின் மீம்ஸ்களுக்கு பதிலடி!

  • IndiaGlitz, [Sunday,June 27 2021]

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் படத்தை கிண்டல் செய்து டுவிட் ஒன்றை பதிவு செய்த நடிகரை, தற்போது ரசிகர்கள் மீம்ஸ் மூலம் கேலி, கிண்டல் செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த மீம்ஸ்களுக்கு நடிகர் பதிலடி கொடுத்துள்ளார்

விஜய் நடித்த ’சுறா’ திரைப்படம் வெளியானபோது அந்த படத்தை கிண்டல் செய்து நடிகர் சந்தீப் கிஷான் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டை வைத்து தற்போது ரசிகர்கள் மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த மீம்ஸ்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சந்தீப் கிஷான் கூறியதாவது:

இதை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. என்னுடைய வார்த்தைகளை நான் மறுபரிசீலனை செய்ய ஒரு சில கணங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இந்த பதிவை எடுத்து வைத்துக் கொண்டு என்னிடம் எப்போது வேண்டுமானால் கேளுங்கள். அப்போதும் நான் இந்த கருத்தில் தான் உறுதியாக இருப்பேன்.

எனக்கு விஜய் அவர்களை மிகவும் பிடிக்கும். அவர் பல கடினமான தருணங்களில் என்னை பலவழிகளில் ஊக்கப்படுத்தியுள்ளார். இதில் வெட்கப்பட ஏதுமில்லை. விஜய் அவர்களின் படங்களை ரசித்தே நான் வளர்ந்தேன். இடைப்பட்ட காலங்களில் ஒரு வழக்கமான சினிமா ரசிகனாக தொலைந்து போனேன். ஆனால் இன்று கடந்த 10 ஆண்டுகளாக அவருடைய பயணம் எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது என்று பெருமையுடன் சொல்வேன். இன்று நான் அவருடைய மிகப்பெரிய ரசிகனாக இருக்கிறேன்

இவ்வாறு சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.

More News

அமெரிக்காவில் இருந்து ரஜினி அழைத்தார்: வைரமுத்து டுவிட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் சென்றார் என்பதும் அங்கு அவர் சில நாட்கள் தங்கியிருந்து உடல் பரிசோதனை

டயாபடிக் நோயாளிகளும் இனி மாம்பழம் சாப்பிடலாம்… சுவீட் இல்லாத புது வரவு!

பொதுவாக நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அதிகம் உள்ள எந்தப் பொருளையும் சாப்பிட முடியாமல் ஏங்குவதைப் பார்த்து இருப்போம்.

கொரோனா பீதியில் பெற்ற மகளையே 15 முறை கத்தியால் குத்திய தாய்… கோரச் சம்பவம்!

லண்டனில் தன் கணவருடன் வசித்துவந்த 36 வயதான தமிழ்ப்பெண் ஒருவர் கொரோனா நேரத்தில் இறந்து விடுவோம் என நினைத்து கடும் மனஅழுத்ததிற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

  முதியவருக்கு 10 மாதத்தில் 43 முறை கொரோனா பாதிப்பு? பீதியைக் கிளப்பும் கோரச் சம்பவம்!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கடந்த 10 மாதங்களில் 43 முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது மருத்துவர்களை கடும் அச்சத்தில்

டெல்டா வேரியண்ட் மூளையை கடுமையாகத் தாக்கும்? விஞ்ஞானி கூறும் அதிர்ச்சி தகவல்!

உருமாறிய வேரியண்ட்களான டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வகைகள் இரண்டும் மிகவும் தீவிரமான தொற்றுநோயாக இருக்கிறது