அமீரின் 'நாற்காலி'யில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

  • IndiaGlitz, [Sunday,December 22 2019]

’மௌனம் பேசியதே', 'ராம்', மற்றும் ’பருத்தி வீரன்’ உட்பட ஒரு சில படங்களை இயக்கிவரும் ஒரு சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவருமான இயக்குனர் அமீர் சமீபத்தில் ’நாற்காலி’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தை இயக்குனர் துரை இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே அஜீத்தின் ’முகவரி’, சிம்புவின் ’தொட்டி ஜெயா’, விக்ரமின் ’காதல் சடுகுடு’ உள்ளிட்ட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் வெளியான சுந்தர் சி நடித்த ’இருட்டு’ என்ற படத்தை இவர்தான் இயக்கினார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’நாற்காலி’ படத்தில் அமீர் ஜோடியாக நடிகை சாந்தினி தமிழரசன் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் தற்போது இதில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நடிகை சாந்தினி இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக மலையாள பட நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

More News

திமுக பேரணியில் விஜய் பங்கேற்பாரா? எஸ்.ஏ.சி பதில்

மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நாளை பிரம்மாண்டமான பேரணி ஒன்றை நடத்த உள்ளது.

இந்தியா-சீனா, எது உண்மையான குடியரசு நாடு: நக்மாவின் கேள்விக்கு பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்

குடியுரிமை சீர்திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.

சிவகார்த்திகேயனின் 'டிசம்பர்' அறிவுரைகளும் வெற்றிகளும்...

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 3 ஆண்டுகளாக டிசம்பர் மாதம் வெளிவந்த திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதாக சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு

குஷ்புவை 'கூ...' என திட்டிய பிரபல நடிகை!

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய குடியுரிமை சீர்திருத்த மசோதாவினால் அரசியல்வாதிகள் மட்டுமின்றி திரையுலகினர்களும் மோதிக் கொண்டு வருகின்றனர்.

கோவை பொதுக்கூட்டத்தில் சிக்கி கொண்ட ஐயப்ப பக்தர்களுக்கு சாலையை கடக்க உதவிய இஸ்லாமியர்கள். வீடியோ.

கோவையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் இஸ்லாமியர்கள் சாலையில் தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது சாலையை கடக்க முடியாமல் தவித்த ஐயப்ப பக்தர்களுக்கு சிலர் உதவி செய்த வீடியோ இப்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.