close
Choose your channels

சாண்டி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த காஜல் பசுபதி: வரவேற்பு எப்படி இருந்தது தெரியுமா?

Tuesday, November 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சாண்டியின் வீட்டிற்கு நடிகை காஜல் பசுபதி சென்றிருந்த நிலையில் அவருக்கு கிடைத்த வரவேற்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் சாண்டி என்பதும் இவர் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் போது காஜல் பசுபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

அதன்பிறகு சாண்டி, சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சாண்டியின் வீட்டிற்கு அவரது முன்னாள் மனைவி காஜல் பகவதி சமீபத்தில் திடீர் விசிட் அடித்துள்ளார். இந்த விசிட்டிங் போது அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது.

சாண்டி,  அவரின் மனைவி சில்வியா மற்றும் சில்வியாவின் தங்கை ஆகியவர்களுடன் எடுத்த புகைப்படங்களை காஜல் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. மேலும் முதல் முறையாக சாண்டியின் மகனைப் பார்த்து அவருடன் புகைப்படமும் எடுத்து கொண்டார்.

சாண்டியை காஜல் பசுபதி பிரிந்தாலும் அவருடன் நட்பாக இருந்து வருவதாக காஜல் பசுபதி ஏற்கனவே பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment