close
Choose your channels

மச்சினியுடன் செம ஆட்டம் போட்ட சாண்டி மாஸ்டர்.. வைரல் வீடியோ

Friday, December 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டர் தனது மச்சினியுடன் செம ஆட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருவது.

கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ உள்பட பல வெற்றிப் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த சாண்டி மாஸ்டர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சாண்டி மாஸ்டர், அவ்வப்போது தனது டான்ஸ் வீடியோக்களை வெளியிடுவதும், அவை மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் சாண்டியின் மனைவி சில்வியாவின் தங்கை சிந்தியா வினோலினியுடன் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் அவர் சற்றுமுன் தனது மச்சினியுடன் டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் இருவரும் ஒரே ஸ்டெப்ஸ்களில் கலக்கல் நடனம் ஆடி அசத்தி உள்ள நிலையில், இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டு ஒரு மணி நேரமே ஆகியுள்ள நிலையில் ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.