சாண்டி அடுத்த படத்தில் இணைந்த 2 திரையுலக மேதைகள்.. எகிறும் எதிர்பார்ப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,July 05 2023]

தமிழ் திரையுலகின் பிரபல டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது ஹீரோவாக அவர் நடித்து வரும் திரைப்படத்தில் இரண்டு திரை உலக மேதைகள் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

சாண்டியின் அடுத்த திரைப்படத்துக்கு ’கிப்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்க இருப்பதாகவும் அல்போன்ஸ் புத்திரன் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா மற்றும் அல்போன்ஸ் புத்திரன் ஆகிய இரண்டு திரையுலக மேதைகள் சாண்டியின் அடுத்த படத்தில் இணைந்திருப்பதை கோலிவுட் திரை உலக ஆச்சரியமாக பார்த்து வருகிறது. மேலும் இந்த படத்திற்காக இசைஞானி இளையராஜா ஏற்கனவே ஏழு பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் கோவை சரளா நடிக்க உள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி சகானா சர்வேஷ், மகாலட்சுமி, சுதர்சன், சம்பத்ராஜ், ராகுல், சார்லி, சைக்கிள் மணி உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

'மாமன்னன்' படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

 உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவான 'மாமன்னன்' திரைப்படம் கடந்த வாரம் பிரமாண்டமாக வெளியானது.

'ஜெயம் ரவி 32' படத்தின் மாஸ் அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி..!

ஜெயம் ரவி நடிக்கும் 32 வது திரைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் அதிகார அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

முதல் நாளும் கடைசி நாளும்.. சியான் விக்ரம் வெளியிட்ட  'தங்கலான்' புகைப்படங்கள்..!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் இந்த படப்பிடிப்பு

என்னால் முடியாததை என் மகள் சாதித்துவிட்டார்! மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ஸ்டார் நடிகர்

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்துவரும் நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய 11 வயது மகளின் சாதனையை ரசிகர்களுடன் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்

சொகுசு பங்களாவில் செயற்கை ஏரி? வசமாக சிக்கிய நட்சத்திர வீரருக்கு 28 கோடி அபராதம்!

கால்பந்து ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் பிரபலமாக இருந்துவரும் பிரேசில் கால்பந்து வீரர் ஒருவர் தன்னுடைய சொகுசு பங்களாவில் செயற்கையாக ஏரி