close
Choose your channels

சாண்டி அடுத்த படத்தில் இணைந்த 2 திரையுலக மேதைகள்.. எகிறும் எதிர்பார்ப்பு..!

Wednesday, July 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது ஹீரோவாக அவர் நடித்து வரும் திரைப்படத்தில் இரண்டு திரை உலக மேதைகள் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

சாண்டியின் அடுத்த திரைப்படத்துக்கு ’கிப்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்க இருப்பதாகவும் அல்போன்ஸ் புத்திரன் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா மற்றும் அல்போன்ஸ் புத்திரன் ஆகிய இரண்டு திரையுலக மேதைகள் சாண்டியின் அடுத்த படத்தில் இணைந்திருப்பதை கோலிவுட் திரை உலக ஆச்சரியமாக பார்த்து வருகிறது. மேலும் இந்த படத்திற்காக இசைஞானி இளையராஜா ஏற்கனவே ஏழு பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் கோவை சரளா நடிக்க உள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி சகானா சர்வேஷ், மகாலட்சுமி, சுதர்சன், சம்பத்ராஜ், ராகுல், சார்லி, சைக்கிள் மணி உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.