தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்குகிறதா 'சங்கத்தமிழன்'?

  • IndiaGlitz, [Friday,August 30 2019]

வரும் தீபாவளி அன்று விஜய்யின் 'பிகில்', விஜய்சேதுபதியின் 'சங்கத்தமிழன்' மற்றும் கார்த்தியின் 'கைதி' ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்புகள் அந்தந்த படங்களின் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வெளிவந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தீபாவளி ரேஸில் இருந்து விஜய்சேதுபதியின் 'சங்கத்தமிழன்' திரைப்படம் பின்வாங்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள செய்தியின்படி 'சங்கத் தமிழன்' திரைப்படம் தீபாவளிக்கு முன்கூட்டியே அதாவது அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

விஜய்யின் 'பிகில்' திரைப்படத்திற்கு பெரும்பாலான முக்கிய தியேட்டர்கள் ஏற்கனவே புக் ஆகி விட்டதால், சரியான தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் விஜய்சேதுபதி படம் முன்கூட்டியே ரிலீஸ் ஆகலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை பொறுமை காப்போம்

More News

ஜெயம் ரவியின் படத்தில் இணையும் 'செக்க சிவந்த வானம்' பட நடிகை!

ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படமான 'ஜன கன மன' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் டாப்சி மற்றும் ஈரான் நாட்டின் நடிகை ல்னாஸ் நோரோஸி

இந்தியாவின் முக்கிய வங்கிகள் இணைப்பு!

இந்தியாவின் வங்கிகள் அவ்வப்போது இணைக்கப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் ஒருசில இந்திய வங்கிகளின் இணைப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது

மூன்று வேடங்களில் சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படம்

காமெடி நடிகராக இருந்த சந்தானம், ஹீரோவாக புரமோஷன் ஆனாலும் காமெடிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையாக தேர்வு செய்து நடிப்பதால் 'தில்லுக்கு துட்டு 2' மற்றும் 'ஏ1' ஆகிய இரண்டு தொடர்

கவலைப்படாதே கவின்: ஆறுதல் கூறிய ஆசிரியை!

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்து வரும் கவினின் தாயார் நேற்று ஒரு வழக்கில் சிறைத்தண்டனை பெற்றதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மெர்சல்' தயாரிப்பாளர் மீது மேஜிக்மேன் போடும் வழக்கு

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தில் மேஜிக்மேனாக நடித்த விஜய் கேரக்டருக்கு பயிற்சி கொடுத்த மேஜிக்மேன் ராமன் ஷர்மா, சென்னை ஐகோர்ட்டில் தேனாண்டாள் பிலிம்ஸ் மீது வழக்கு தொடர்கிறார்.