close
Choose your channels

காதல் மனைவியுடன் சஞ்சு சாம்சன்.. வைரல் புகைப்படங்கள்..!

Tuesday, February 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐபிஎல் போட்டிகள் மூலம் பல திறமையான வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர்களின் ஒருவர் சஞ்சு சாம்சன் என்பது தெரிந்தது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் ஆரம்ப காலத்தில் கேரளாவில் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய நிலையில் அதன் பின்னர் ஐபிஎல் போட்டியில் மிக இளம் வயதிலேயே அடி எடுத்து வைத்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றார். அதன் பிறகு அவர் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்காக விளையாடினார் என்பதும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சஞ்சு சாம்சன் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான சாருலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கல்லூரி காலத்திலிருந்து நெருங்கிய நண்பர்களாக இருந்து அதன் பின் காதலர்களாக மாறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமணத்திற்கு பல பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சு சாம்சன் மற்றும் சாருலதா ஆகிய இருவரும் ஒரே கல்லூரியில் படித்தாலும் சஞ்சு சாம்சன் தான் முதலில் தனது காதலை சொல்லி இருக்கிறார். அந்த காதலை ஏற்றுக் கொண்ட சாருலதா அதன் பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். சாருலதா ஒரு தொழிலதிபர் என்பதும் சுய தொழில் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் உலகில் சஞ்சு சாம்சன் துவண்டு இருக்கும் போதெல்லாம் அவரது மனைவிதான் தன்னம்பிக்கை தருவார் என்று பல பேட்டிகளில் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சஞ்சு சாம்சன் -சாருலதா புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment