ஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம்: கேரள வீரரின் சாதனை

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று கோவா மற்றும் கேரள அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் கேரளா அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் என்பவர் அதிவேக இரட்டை சதம் அடித்து சாதனை செய்துள்ளார். இவர் 129 பந்துகளில் 212 ரன்கள் அடித்துள்ளார். இதில் 10 சிக்ஸர்கள் மற்றும் 20 பவுண்டரிகள் அடங்கும்.

இந்த சாதனையால் இரட்டைச்சதம் அடித்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் சச்சின், சேவாக், ரோஹித் சர்மா, தவான் மற்றும் கெளசல் ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர். மேலும் உலகிலேயே ஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம் அடித்த வீரர்களில் இரண்டாவதாக சஞ்சு சாம்சன் உள்ளார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் இரட்டைச்சதம் அடித்த நிலையில் சஞ்சு, 125 பந்துகளில் இரட்டைச்சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

தக்காளி ரசமும், தஞ்சாவூர் கோழிக்கறியும்! சீன அதிபர் விருந்தின் மெனு

சீன அதிபர் சென்னை மற்றும் மாமல்லபுரத்திற்கு இரண்டு நாள் பயணமாக நேற்று வருகை தந்தார். அவருக்கு தமிழர்கள் சார்பில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐடி ரெய்டுக்கு மறுநாள் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் துணை முதல்வரின் பி.ஏ

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் நேற்று திடீரென முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜி பரமேஸ்வரா

முதல் படமே ரிலீஸ் ஆகவில்லை, அதற்குள் சூப்பர் ஸ்டார் மகனுடன் காதலா?

பிரபல மலையாள மற்றும் தமிழ் பட இயக்குனர் பிரியதர்ஷன் அவர்களின் மகள் கல்யாணி பிரியதர்ஷன், தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பஞ்சபாண்டவர்களின் அரஜாகத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி: சுரேஷ் காமாட்சி

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கிய 'மிக மிக அவசரம்' என்ற திரைப்படம் நேற்று வெளியாகி இருந்தது. ஆனால் தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தினால்

மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்டார்களா 'வி ஆர் பாய்ஸ்?

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் விதிமுறைகளை மீறியதால் பாதியிலேயே வெளியேற்றப்பட்ட மதுமிதா, வெளியே வந்தவுடன் சேரன் மற்றும் கஸ்தூரி ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைவரின் மீதும் குற்றம் சாட்டினார்