நடிகை ஆஸ்னா ஜாவேரியுடன் திருப்பதியில் திருமணமா? சந்தானம் மறுப்பு

  • IndiaGlitz, [Wednesday,November 04 2015]

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', இனிமே இப்படித்தான் படங்களில் ஜோடியாக நடித்த சந்தானம் மற்றும் ஆஸ்னா ஜாவேரி ஆகிய இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டதாக கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகிறது.

ஒரு புதிய படத்தை ஆரம்பிக்கும் முன்னர் திருப்பதி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யும் வழக்கம் உடைய சந்தானம் திருப்பதிக்கு தனது குடும்பத்தினர்களுடன் இன்று சென்றுள்ளார். அதே நேரத்தில் தனது பெற்றோருடன் திருப்பதி வந்த நடிகை ஆஸ்னா ஜாவேரி, தற்செயலாக சந்தானத்தை பார்த்து பேசியதாகவும், இதை பார்த்த ஒருசிலர், இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டதாக வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். இதுகுறித்து சந்தானம் தனது மறுப்பை தெரிவித்துள்ளார். இருவரும் தற்செயலாக திருப்பதியில் சந்தித்ததாகவும், இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தானம் திரையுலகிற்கு வருவதற்கு முன்பே திருமணமானவர் என்பது பலருக்கு தெரியும். அப்படியிருந்தும் இதுபோல் வதந்தியை கிளப்பிவிட்டு அவர்களுடைய குடும்ப வாழ்க்கையில் விளையாடுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை. ஒரு நடிகரின் நடிப்பை மட்டுமே விமர்சனம் செய்ய மற்றவர்களுக்கு உரிமை உண்டு. தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு அவர்களுடைய குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் வதந்தியை கிளப்பிவிடுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

More News

வெங்கட்பிரபுவின் அடுத்த 'சென்னை 28' இரண்டாம் பாகமா?

சூர்யா, நயன்தாரா நடித்த 'மாஸ்' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது அடுத்த படத்திற்காக ஆரம்பகட்ட பணியை தொடங்கியுள்ளார்...

சூப்பர் ஸ்டார்களுடன் அடுத்தடுத்து இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்?

அருள்நிதி நடித்த 'மெளன குரு' படத்தின் இந்தி ரீமேக் படமான 'அகிரா' படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்புகளை ஏ.ஆர்.முருகதாஸ் முடித்துவிட்டதாகவும்...

கமல்-அமலா படத்தில் இணையும் இளம் ஹீரோயின்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை அமலா நடிக்கவுள்ளதாகவும்...

'எந்திரன் 2': அர்னால்ட் நிபந்தனையை ஷங்கர் ஏற்பாரா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விரைவில் 'எந்திரன் 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ரஜினிகாந்த்,...

தேசிய விருது பெற்ற நடிகரின் நிச்சயதார்த்த தேதி

பீட்சா, சூது கவ்வும், நேரம் போன்ற படங்களில் நடித்த நடிகர் பாபிசிம்ஹா, 'ஜிகர்தண்டா' படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்...